Today Proverb: Faith is taking the first step even when you don't see the whole staircase.

Search Vcominfotech.com :

Seo Packages Ecommerce Packages

Title:கண்டங்கள் கண்டு வியக்கும் கலைஞன்- ஸ்பெஷல்

News Paper

தமிழ் சினிமா என்ன தவம் செய்தது என்று தெரியவில்லை, கமல்ஹாசன் என்ற கலைஞனை 50 வருடங்களுக்கு மேல் நெஞ்சில் சுமக்க. திரையில் நடிகன் செய்வதை தான் மக்கள் தன் வாழ்வில் பல இடங்களில் பிரதிப்பலிக்கின்றன.

அந்த வகையில் 80 களிலேயே பல ட்ரண்ட்டுகளை உருவாக்கியவர் கமல்ஹாசன். தமிழகம் மட்டுமில்லை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை என ஒட்டு மொத்த திரையுலகமும் கண் இமைக்காமல் கமல்ஹாசனின் அசுர வளர்ச்சியை பார்த்தது.

நடிப்பு இவரின் உணவு, அதை தானும் சாப்பிட்டு தன் ரசிகர்களுக்கும் பல வருடங்களாக பகிர்ந்து வருகிறார். சினிமாவில் எந்த பகுதியை எடுத்து ஆராயந்தாலும் அதில் கமல்ஹாசன் என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருக்கும்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமா என்கின்ற வட்டத்தில் 360 டிகிரியையும் பார்த்து வந்துவர் இந்த கமல்ஹாசன். அந்த வட்டத்தை தமிழகம் என்றில்லாமல், இந்தியா என்றில்லாமல் உலகம் நோக்கி கொண்டு செல்வது இவரின் கனவு.

படத்திற்கு படம் வித்தியாசமான தோற்றும், தமிழ் சினிமாவை வேறு தளத்தில் கொண்டு செல்வது என புதுப்புது அத்தியாயங்களை தேடி தேடி அலைபவர். இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால், சினிமாவின் கடவுளாக தான் இன்று இவரை பலரும் பார்க்கின்றனர். திரை உலக நாயகன் கலைஞானி, பத்மஸ்ரீ, டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு சினி உலகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Comments

Top